in

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக உடை அணிந்து நடனம் ஆடிய பள்ளி சிறுவர்கள்

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக உடை அணிந்து நடனம் ஆடிய பள்ளி சிறுவர்கள்

காந்தி பஜாரில் பல மாநிலங்களின் உடைகளை அணிந்து பள்ளி சிறுவர்கள் ஊர்வலமாக சென்றது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது

இந்திய நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் வெகு.   விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அப்பொழுது பள்ளி சிறுவர்கள் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா,குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களின் உடைகளை அணிந்து நடனம் ஆடி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

முன்னதாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் உடைகளை அணிந்து பள்ளி சிறுவர்கள் செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி பஜார் வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

What do you think?

நாமக்கலில் ஸ்ரீ வித்யா மூல மந்திர மகா யாக வேள்வி நிகழ்வு