சிதம்பரம் காந்தி சிலை அருகில் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ராஜா முத்தையா அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் முழுமையாக கொண்டுவந்து செயல்படவும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சிறப்பு பன்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
தில்லையம்மன் ஓடையை ஒட்டி அமைக்கப்பட்டு வரும் வெளிவட்ட சாலையில் போதுமான வடிகால் மதகுகள் அமைத்து விரைந்து சாலை பணிகளை முடித்து நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்.

சிதம்பரம் நகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி திடக்கழிவு மேலாண்மையை சரிவர செய்து சுகாதாரம் பேணி காத்து சீர்மிகு சிதம்பரமாக காத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
சிதம்பரம் நகருக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலா வாகனங்கள் நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமிப்பு செய்வதால் ஏற்படும் போக்குவரத்து நெர்சலை தவிர்க்க சுகாதார சீர்கேடுகளை தடுத்திட புறநகர் பகுதிகளில் சுற்றுலா வாகனங்களை நிறுத்திட மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து குடியிருப்போர் நல சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், வர்த்தகர் சங்கம், இயற்கை வேளாண் வேளாண்மை உழவர் சங்கம், பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

