in

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.

இக்கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும் இத்தகைய பிரசித்தி பெற்ற திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து யானை மீது கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது தொடர்ந்து .

மேளதாளம் முழங்க திருவிழா கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் மஞ்சள் தயிர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகமும் .

பின்னர் கொடிமரம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சிகப்பு சாத்தி உற்சவம் 30-ஆம் தேதியும் பச்சை சாத்தி உற்சவம் 31ஆம் தேதியும் திருத்தேரோட்டம் ஒன்றாம் தேதியும் நடைபெறுகிறது தைப்பூச தெப்ப திருவிழா வரும் இரண்டாம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

மயிலாடுதுறை காவேரிக்கரை பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலய திருவிளக்கு பூஜை

திம்மாநாயக்கன் படித்துறை பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலய 8ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் குத்துவிளக்குடன் பங்கேற்று