in

விரும்பிய சின்னம் கிடைத்ததை கொண்டாடிய தவெகவினர்

விரும்பிய சின்னம் கிடைத்ததை கொண்டாடிய தவெகவினர்

 

விரும்பிய சின்னம் கிடைத்ததை மயிலாடுதுறையில் பட்டாசு வெடித்து, சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, விசில் வழங்கி கொண்டாடிய தவெகவினர்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் தங்கள் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.

இதனை ஏற்று தேர்தல் ஆணையம் நேற்று அக்கட்சிக்கு விசில் சின்னம் வழங்கியது. விரும்பிய சின்னம் கிடைத்ததை அக்கட்சியினர் மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் தவெக மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் ஒன்றுகூடிய தமிழக வெற்றிக் கழகத்தினர், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

பின்னர் அவர்கள் சிறுவர்கள் பொது மக்களுக்கு தங்கள் கட்சியின் சின்னமான விசிலை வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் ராஜ்குமார் தவெக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மகளிரணியினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பது நம் கடமை என உறுதிமொழி ஏற்று பேரணி

மயிலாடுதுறை படித்துறை காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை