in

கும்பகோணம் அருகே சிற்றடையாநல்லூர் ஒரு வார காலமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கும்பகோணம் அருகே சிற்றடையாநல்லூர் ஒரு வார காலமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் ஒன்றியம் சிற்றடையாநல்லூர் மெயின் ரோடு மற்றும் குடியானத் தெருவில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடனே குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

தொடர்ந்து தகவலயறிந்த திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What do you think?

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

நான்காம் படை வீடான சுவாமிமலையில் தைப்பூசத்தை திருவிழாவிளையொட்டி, இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது