700-க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பல்கலைக்கழக உலகமான பூமா கோவில் பகுதியில் ஒரு நாள் அடையாள பெருந்துறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகைகள் மற்றும் முனைவர் பட்ட ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பேராசிரியர்கள் ஊழியர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற 14 மாதம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை நிர்வாகம் மற்றும் தமிழக அரசன் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் பெருந்திரள் உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் என திரளாக பங்கேற்று உள்ளனர்.
ஊழியர்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழக அரசும் செவி சார்க்காவிட்டால் வருகின்ற 27 ஆம் தேதி முதல் காலவரை வேலை நிறுத்த போராட்டம் தொடர உள்ளதாகவும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தகவல்.


