in

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழா

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1924 ஆம் ஆண்டு பரமக்குடி அருகே உள்ள செல்லூரில் வேதநாயகம் ஞானசுந்தரி இவர்களுக்கு முதலாவது மகனாக பிறந்தவர் இமானுவேல் சேகரனார் இளமைப் பருவத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தனது தந்தையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மூன்று மாதம் சிறைச்சென்றார் .
     
பின் ராணுவ பணியில் பஞ்சாபில் கவில்தார் மேஜராக வேலை பார்த்து வந்தவர் திருமணம் செய்து கொள்வதற்காக ஊருக்கு வந்தபோது தென் மாவட்ட பகுதிகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து சம உரிமைகாகா குரல் குரல் கொடுத்து வந்தவர் .

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ஆம் தேதி இவரது நினைவு நாள் மற்றும் குருபூஜை விழாவில் சாதி மத சமயங்களைக் கடந்து மக்களும் மற்றொருபுறம் அரசியல் கட்சி,சமுதாய கட்சி தலைவர்கள் பலரும் மலர்மாலைகள் அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்துவார்கள் .

கடந்த ஆண்டு இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு அக்டோபர் 9 தேதி இவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிச்சிருந்த நிலையில பரமக்குடி சந்தைப்பேட்டை அருகாமையில் மூன்று கோடி மதிப்பீட்டில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு.

இன்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது இதில் பங்கேற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மகேந்திர பாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் செய்தாலும் கூட அரசு அதை கண்டுக்க மாட்டேங்குது.

எனவே தமிழக அரசு எங்களது பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் பரமக்குடி பேருந்து நிலையத்திற்கு இமானுவேல் சேகரனர் பெயர் சூட்ட வேண்டும் பரமக்குடி ஓட்ட பாலம் ரவுண்டானாவில் இமானுவேல் சேகரனரின் திருவுருவ வெங்கல சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்தனர் மேலும் இது குறித்து அவர் கூறியதாவது.

What do you think?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

மதுரையில் தை அமாவாசை விரதம் மேற்கொண்ட பக்தர்கள்