in

ரேடியோ செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதல்-வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

ரேடியோ செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதல்-வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியதாக கூறி ஒரு தரப்பினர் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட முயற்சி-போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த முக்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவருடைய மகன் ரஞ்சித் குமார் ரேடியோ ஆடியோ செட் போடும் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று ரேடியோ ஆடியோ சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டதாகவும் அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பொருட்களை அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியதாக பார்த்திபன் தரப்பினர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் மீது செஞ்சி போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

   
இந்நிலையில் நேற்று ஜனவரி 16 ஆம் தேதி இரவு நாராயணசாமி தரப்பினர் மற்றும் வெளியூரிலிருந்து சில நபர்களை அழைத்து வந்து மீண்டும் பிரச்சனை செய்ததில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக இருதரப்பினரும் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் நாராயணசாமி தரப்பினர் கொடுத்த புகார் மீது மற்றும் வழக்கு பதிவு செய்ததாகவும் அதே சமயம் பார்த்திபன் தரப்பினர் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் மேலும் முதல் நாள் புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் .

அடுத்த நாள் வந்து தாக்குதல் நடத்தி இருக்க மாட்டார்கள் செஞ்சி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான் அடுத்த நாள் மீண்டும் வந்து தாக்குதல் நடத்தியதாக கூறி 20 க்கும் மேற்பட்ட பெண்கள் செஞ்சி காவல் நிலையத்தில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய செஞ்சி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக செஞ்சி காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இது குறித்து செஞ்சி போலீசாரிடம் கேட்டபோது இரு தரப்பினர் கொடுத்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதனிடையே இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பொங்கல் திருவிழா வட்டாச்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்

அரசு மதுபான கடையை மூடக்கோரி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்-பரபரப்பு