மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோசாலையில் ஏராளமான மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்
நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் விவசாயிகள் மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும்,மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வாணதிராஜபுரத்தில் அமைந்துள்ள கோசாலையில் ஆதரவற்று திரியும் மாடுகள்,பால் அற்றுப்போய்,அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள்,முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன .

இங்கு 1000க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் மாடுகளுக்கு பூஜை மற்றும் தீபாராதனை செய்து வணங்கி உணவு அளித்து வழிபாடு நடத்தினர்.


