இந்தப் பொங்கல் கருப்பு பொங்கல்
உயிர் போகும் வரை போராட்டம் தொடரும் – பகுதிநேர ஆசிரியர் பரபரப்பு பேட்டி
குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் தருகிறீர்கள் கொடுத்த வாக்குறுதியை கேட்டு போராடுகிறோம் எங்களை கைது செய்கிறீர்கள்..! பகுதி நேர பெண் ஆசிரியர் கண்ணீர் மல்க பேட்டி ..

சென்னை வானகரத்தில் டிபிஐ வளாகத்தில் போராடிய ஆசிரியர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர் அப்போது அங்கு பகுதிநேர ஆசிரியர் பெரும்பூரை சேர்ந்த கண்ணன் என்பவர் திடீரென விஷம் அருந்தி(கெமிக்கல்) தற்கொலை முயற்சிக்கு செய்து மயங்கி விழுந்தார் இதனை எடுத்து அவரை மீட்டு சக ஆசிரியர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பகுதி நேர ஆசிரியர் பெண்மணி கூறுகையில். எட்டாம் தேதியில் இருந்து இன்று வரை ஆறு நாட்கள் அகிம்சை முறையில் அமைதியாக போராடி வருகிறோம்.படிப்படியாக செய்கிறேன் என கூறிவிட்டு எந்த ஒரு உயர்வும் தரவில்லை .
உங்களுக்குள் அறிவிப்பு தரவில்லை என்றால் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்.
போராட்டத்தில் ஆசிரியர்கள் இறந்து கொண்டே தான் இருக்கிறார்கள் .
குடித்து இறந்தவருக்கு 10 லட்சம் உடனடியாக தருகிறீர்கள் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை கேட்டு போராடுகிறோம் எங்களை கைது செய்கிறீர்கள் என தண்ணீர் மல்க கூறினார்.
இந்த பொங்கல் கருப்பு பொங்கலாக கொண்டாட போகிறோம் உயிர் பிரியும் வரை எங்கள் போராட்டம் தொடரும்

