கும்பகோணத்தில் சாலை பாதுகாப்பு வார்த்தையொட்டி கொட்டும் மழையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
கும்பகோணத்தில் 1989-ஆம் ஆண்டு முதல் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார்த்தையொட்டி விழிப்புணர்வு பேரணி தாராசுரம் மார்க்கெட்டில் இருந்து தொடங்கி தாலுகா காவல் நிலையம், கும்பேஸ்வரர் கோவில், உச்சி பிள்ளையார் கோவில், பழைய மீன் மார்க்கெட் நால்ரோடு வரை கொட்டும் மழையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரவையை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் கூடுதல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அங்கித் சிங், மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் கொட்டும் மழையில் ஊர்வலமாக சென்றனர்.

