in

இந்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை மறந்துவிடுகள் – தேர்தல் வர உள்ளதால் மூன்று ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.

இந்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை மறந்துவிடுகள் – தேர்தல் வர உள்ளதால் மூன்று ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.

இங்கு ஹீரோக்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், உண்மையான ஹீரோ அன்புமணி தான் என செஞ்சி அடுத்த அப்பம்பட்டு பகுதியில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி பேச்சு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு பகுதியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில்
சிங்கப்பெண்னே எழுந்து வா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு செளவுமியா அன்புமணி நடை பயணமாக வருகை புரிந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய செளவுமியா அன்புமணி.செஞ்சி பகுதி வரலாற்று சிறப்பு மிக்க ஊர். ராஜாக்கள் அரண்மனை கட்டுவார்கள் ஆனால் செஞ்சியில் கோட்டை கட்டியுள்ளனர்.

மக்களை பாதுக்காக்க மூன்றடுக்கு பாதுகாப்போடு உள்ள கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதற்கு மக்களை காக்க வேண்டும் என்பது தான் நோக்கம். ஆனால் இன்றைக்கு அரசு அப்படி உள்ளதா? இன்று மக்களை பாதுகாக்கப்படுகிறார்களா? மக்களை பாதுகாக்கும் அரசாக தற்போதுள்ள அரசு உள்ளதா என நினைத்தால் இல்லை என்பதே உண்மை. செஞ்சியில் உப்பு மற்றும் சுண்ணாம்பு கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. செஞ்சி பகுதி வானம் பார்த்த பூமி. தண்ணீர் இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது.

தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரை 36 ஏரிகளில் நிரப்பினால் பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பலன் பெறும். நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தினால் விழுப்புரம் மாவட்டம் பசுமையாக இருக்கும்.

விழுப்புரம் மாவட்டம் அதிக குடிசை உள்ள மாவட்டம். குடிநீர் இல்லை. விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. ஆனால் தமிழ்நாடு முழுக்க ஆறாக ஓடும் தண்ணீர் டாஸ்மாக் சாராயம் தான்.

பொங்கல் பண்டிகைக்கு மாட்டின் கொம்பிற்கு பாமகவின் மூவர்ண நிறத்தை வண்ணம் தீட்டுவோம். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விழுப்புரம் மாவட்டத்தில் 30 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் 11 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு மூன்றாயிரம் பரிசு தொகை வந்துள்ளது. மூன்று நாளைக்கும் மூன்றாயிரம் ரூபாய் செலவாகிவிடும். கடந்த ஆண்டு தேர்தல் இல்லை அதனால் பணம் தரவில்லை.

மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் மது விற்பனையில் கிடைத்த பணம் தான்.டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி மது விற்பனை நடைபெறுகிறது. ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றுவார்கள்.

அரசு எந்த நல்ல திட்டமும் கொண்டுவரவில்லை. விவசாயத்தை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் டாஸ்மாக்கை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள்.செஞ்சி புதிய அரசு கலை கல்லூரி ஆரம்பித்துள்ளனர். மாணவர்கள் சென்று வர பேருந்து வசதி செய்யவில்லை. ஆனால் அதன் அருகில் மதுபான கடை உள்ளது

இதுவா அரசாங்கம்.கஞ்சா,போதை மிட்டாய்களை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். போதை, மது பழக்கத்தை ஒழிக்க இந்த அரசுக்கு நோக்கமில்லை. மதுவை ஒழிப்பேன் என் கூறுபவர் உங்கள் அண்ணன் அன்புமணி தான். 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தவர் அன்புமணி. அரசு பொங்கலுக்கு 50 கோடிக்கு மது விற்பனையை இலக்காக வைத்துள்ளனர்.

இதற்கு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மது பாட்டில்களை வைத்துள்ளனர். இந்த தேர்தலில் உங்களின் தலையெழுத்தை நீங்கள் தான் தீர்மானிக்க போகிறீர்கள்.ஆயிரம் ரூபாய், மூன்றாயிரம் ரூபாய்க்கு ஏமாறாதீர்கள்.

இவர்களுக்கு வாக்களித்தால் உங்கள் பிள்ளைகளில் தலையெழுத்தை நீங்கள் தான் முடிவு செய்யனும். காசு கொடுத்து மக்கள் வாயை அடைக்க முயல்கிறார்கள். இந்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை மறந்துவிடுங்கள்.

அன்புமணி மட்டுமே துணையாக இருப்பார். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. பெண்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக வரவேண்டும். பெண்களுக்கு உரிமை வேண்டும். நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஹீரோ யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அன்புமணி தான் உண்மையான ஹீரோ என்றார்.

What do you think?

பிரபாஸ் நடிப்புல மாஸ் ஆக்ஷன் த்ரில்லரா உருவாயிருக்கு ‘தி ராஜா சாப்’

The Ultimate Guide to Casino Site Reliable