கனமழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை புரிந்துள்ளனர்
தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.


இது அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.இதனால் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்தார்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு கமாண்டர் அலோக் குமார் சுக்லா தலைமையிலான 27 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை புரிந்துள்ளது.தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை சந்தித்த அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


