பராசக்தி’ படத்துக்கு ஒரு வழியா ‘க்ரீன் சிக்னல்
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுமா இல்லையான்னு ஒரு பக்கம் சஸ்பென்ஸ் போயிட்டு இருக்கிற இதே நேரத்துல, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துக்கு ஒரு வழியா ‘க்ரீன் சிக்னல்’ கிடைச்சிருச்சு!
பொங்கலுக்கு வர வேண்டிய சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துக்கும் சென்சார் போர்டு செம குடைச்சல் கொடுத்துட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ எல்லா சிக்கலும் முடிஞ்சு படம் நாளைக்கு தியேட்டருக்கு வர்றது உறுதியாகிடுச்சு.
இழுபறி: 1965 இந்தி எதிர்ப்பு போராட்டக் கதைங்கிறதால, சில சீன்களைத் தூக்கணும்னு சென்சார் போர்டு பிடிவாதம் பிடிச்சாங்க. இந்த விவகாரம் சென்னை ஹைகோர்ட்டுக்குப் போக, கோர்ட் கொடுத்த உத்தரவோட பேரில் இப்போ படத்துக்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கிட்டாங்க.
பராசக்தி’ படம் மொத்தம் 2 மணி நேரம் 43 நிமிஷம் ஓடும்னு அறிவிச்சிருக்காங்க. எஸ்கே கூடவே ஜெயம் ரவி, அதர்வான்னு ஒரு பெரிய பட்டாளமே இருக்குறதுனால தியேட்டர்ல விசில் பறக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
நாளைக்கு (ஜனவரி 10) படம் ரிலீஸ், ஆனா இன்னைக்கு தான் சர்டிபிகேட் கைக்கு வந்திருக்கு. ஒரு நிமிஷம் படக்குழுவே பதறிப்போயிட்டாங்க!
ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுறதுல இன்னும் சட்ட சிக்கல் நீடிச்சுட்டு இருக்குறதுனால, அந்தப் படத்துக்கு ஒதுக்குன தியேட்டர்கள் இப்போ ‘பராசக்தி’ படத்துக்குக் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்காம். இதனால எஸ்கே-வோட பாக்ஸ் ஆபீஸ் வசூல் எகிறப்போகுது!

