in

தமிழ் சினிமா ‘மிக்ஸட்’ சிச்சுவேஷன்


Watch – YouTube Click

தமிழ் சினிமா ‘மிக்ஸட்’ சிச்சுவேஷன்

 

தமிழ் சினிமாவில் எப்போதுமே விஜய் – அஜித் மேட்ச் தான் செம கிக்கா இருக்கும்.

இப்போ இந்த பொங்கலுக்கும் அதே மாதிரி ஒரு ‘மிக்ஸட்’ சிச்சுவேஷன் உருவாயிருக்கு.

ஒரு பக்கம் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன சோகம், இன்னொரு பக்கம் டிவியில ‘ஏகே’ வரப்போற கொண்டாட்டம்.

முழு விவரம் என்னன்னு பார்ப்போமா. தமிழ் சினிமாவுல ரஜினி – கமலுக்கு அப்புறம், பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கிறது நம்ம விஜய் – அஜித் தான்.

முன்னாடி இவங்க ரசிகர்கள் சோஷியல் மீடியாவுல பயங்கரமா அடிச்சுப்பாங்க. ஆனா இப்போ நிலைமை மாறிடுச்சு, ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணாம, அவரவர் ஹீரோவை கொண்டாடுறதுல மட்டும் தான் இப்போ ஃபோக்கஸ் பண்றாங்க.

ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பும்னு எதிர்பார்த்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ இப்போ ரிலீஸ் ஆகல.

ரிலீஸ்க்கு முன்னாடியே ப்ரீ-புக்கிங்ல மட்டும் 65 கோடி ரூபாய் வசூல் செஞ்சு மிரள வச்சிருந்தது இந்தப் படம். ஆனா சென்சார் போர்டு இன்னும் கிரீன் சிக்னல் தராததுனால படம் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கு.

முதல் நாள் முதல் காட்சி பாக்க ஆசையா டிக்கெட் எடுத்த தளபதி ரசிகர்கள் இப்போ செம அப்செட்ல இருக்காங்க. விஜய் ரசிகர்கள் சோகத்துல இருக்குற அதே நேரத்துல, அஜித் ரசிகர்கள் செம குஷியில இருக்காங்க.

அதுக்குக் காரணம், போன வருஷம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் இப்போ டிவிக்கு வருது.

வர்ற ஜனவரி 15-ஆம் தேதி, பொங்கல் ஸ்பெஷலா சன் டிவியில மாலை 6.30 மணிக்கு இந்தப் படம் ஒளிபரப்பாகப்போகுது. குடும்பத்தோட சேர்ந்து பொங்கல் அன்னைக்கு அஜித்தோட படத்தைப் பாக்கலாம்னு ‘ஏகே’ ரசிகர்கள் இப்போவே கொண்டாட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க.

இங்க ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, விஜய் படம் தள்ளிப்போனதுக்கு அஜித் ரசிகர்கள் கிண்டல் பண்ணல. அதே மாதிரி, அஜித் படம் டிவிக்கு வர்றதை விஜய் ரசிகர்கள் அமைதியா பாத்துட்டு இருக்காங்க. இது தமிழ் சினிமா ரசிகர்களோட மெச்சூரிட்டியைக் காட்டுது.

What do you think?

நாமக்கல் ராசிபுரம் அடுத்த தென்திரு அண்ணாமலையார் ஆலயத்தில் மார்கழி தேய்பிறை பஞ்சமி சப்த மாதர்களுக்கு அபிஷேக ஆராதனை

ஸ்பை த்ரில்லர் (Spy Thriller) வசூல் மழை கொடுத்த படம் ‘துராந்தர்’