முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோயில்பட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு மாற்று மதத்தினர் இடையூறாக இருந்து வருவதாக கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் இந்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிக்காக இன்று வருகை தரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேனியில் இருந்து செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநிலத் துணைத் தலைவர் குரு ஐயப்பன் மற்றும் தேனி மண்டல தலைவர் கருப்பையா தேனி மாவட்ட அமைப்பாளர் முனியாண்டி ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.


