ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் திருநாள்
நம்பெருமாள் இன்று (பகல் பத்து) 7 ஆம் நாளில் – திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி திருவாலி திவ்ய தேச பாசுரம் செவிமடுக்க, ஆண்டாள் (கிருஷ்ணன்) முத்துக் கொண்டை சாற்றி;

அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து; வைரக்கல் அபய ஹஸ்தம் சாற்றி; திருமார்பில் இருபுறமும் முதன்முறையாக மகர கர்ண பத்ரங்கங்களை நேர்த்தியாக அணிந்து;
மகரி ; ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் நடுவில் சாற்றி; சிகப்பு கல் வைத்த வெள்ளை பூ பதக்கம் அணிந்து;
வரிசையாக வைரக்கல் மகர கண்டிகைகள் திருமேனி நிறைந்து சாற்றி ; தங்கப் பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை அணிந்து;

பின் சேவையாக – நீல கல் வைத்த வெள்ளை பக்க்ஷி பதக்கம் – புஜ கீர்த்தி ; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாதிக்கிறார்.



