அரசியல் கட்சிகளின் தலைவர், கொடி, சின்னங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் குடில்
அரசியல் கட்சிகளின் தலைவர், கொடி, சின்னங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் குடில்….அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்..
புதுச்சேரி அரியாங்குப்பம் உப்புக்கார வீதியில் வசிக்கும் சுந்தரராசு ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் செய்வது வழக்கம்.
இந்த வருடம் 13-வது முறையாக வித்தியாசமான அரசியல் கட்சிகளின் தலைவர், கொடி, சின்னங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் குடில் செய்து உள்ளார்.
2026 ல் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் வருவதால் 100% வாக்களிப்பு வலியுறுத்தும் வகையில் குடிலை ஆசிரியர் அமைத்துள்ளார்.
மாநிலக் கட்சிகள் 36, தேசிய கட்சிகள் 6 ஆகியவற்றின் தலைவர் மற்றும் கொடி இடம் பெற்றுள்ளது. இதே போல் அரசியல் கட்சிகளின் கொடிகளைக் கொண்டு கிறிஸ்மஸ் மரமும் உருவாக்கப்பட்டுள்ளது .
இந்து மதத்தினை பின்பற்றி வரும் அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசுபெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணிபுரியும் இவர் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு விழிப்புணர்வு குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு ஒரு கன செ.மீ கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றார். அதேபோல் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மூலம் காய்காறிகளான கிறிஸ்துமஸ் குடில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறு சூழற்சி விழிப்புணர்வை மூலம் குடி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கலால் வடிவமைத்த கிருஸ்துமஸ் குடில், மரம் வளர்போம் என்ற விழிப்புணர்வு மூலம் தேங்காய்களை கொண்டு வடிவமைத்து குடில், சிறு தானிய குடில் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட கிருஸ்துமஸ் குடில்களை செய்து உள்ளார்.
இது போன்ற விழிப்புணர்வு செய்ததை பாராட்டி உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் சுந்தரராசு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு சிறப்பித்தது குறிப்பிட தக்கது..
