in

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் சுவாமி நம்மாழ்வாா் திருக்கோவில் திரு அத்யயன உற்சவம்

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் சுவாமி நம்மாழ்வாா் திருக்கோவில் திரு அத்யயன உற்சவம்

 

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் சுவாமி நம்மாழ்வாா் திருக்கோவிலில் திரு அத்யயன உற்சவம் அரையா் சேவையுடன் ஆரம்பம். திரளான பக்தா்கள் தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டு திருப்பதிகளாக நவதிருப்பதி திருக்கோவில்கள் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ளது.

இதில் ஆழ்வாா்திருநகாி (எ) திருக்குருகூா் யில் அருள்மிகு ஆதிநாதா் சுவாமி நம்மாழ்வாா் திருக்கோவிலில் நவதிருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக 9வது ஸ்லமாக அமைந்தள்ளது.

ஆழ்வாா்களில் முதன்மையானவரும் வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படும் சுவாமி நம்மாழ்வாா் அவதாரத் திருத்தலம்.

இத்திருத்தலத்தில் ஆண்டுமுழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் மாா்கழியில் நடைபெறும் திருஅத்யயன உற்ச்வம் சிறப்பாகும். சுவாமி நம்மாழ்வாருக்காக நடைபெறும்.

இவ் உற்சவம் பகல்பத்து இராப்பத்து என 21 தினங்கள் நடைபெறுகின்றது.

தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்யபிரபந்தத்தை மார்கழி மாத சுக்லபட்சம் தொடங்கி பெருமாள் முன் பாடுவது அத்யயன உற்சவமாகம்.

முன்னொரு காலத்தில் சுவாமி நம்மாழ்வாா் ஸ்ரீரங்கத்திற்கு ஏழுந்தருளி அங்கு இந்த உற்சவம் நடைபெறும். தற்போது உள்ள கால சூழ்நிலையில் ஆழ்வாா்திருநகாியிலேயே நடைபெறுகின்றது.

இத்திருத்தலத்தில் அவதரித்த ஸ்ரீ மணவாள மாமுனிகள் இக்கோயில் வழிபாட்டு முறைகளை சீர்மைத்தவர். இத்திருவிழாவில் முதல் 10 நாட்களில் திவ்ய பிரபந்தப் பாசுரங்களில் குறிப்பிட்ட பாசுரங்களுக்கு அரையர் வியாக்கியானம் அபிநயத்துடன் பாடவும்.

பிற்பத்து நாட்களில் திருவாய்மொழிப் பாசுரங்களை இசையோடு ஸ்ரீ பூமி நீளா தேவி சமேத சுவாமி பொலிந்து நின்ற பிரான் முன் விண்ணப்பிக்கவும் வரைமுறை செய்துள்ளாா்.

சிறப்பான திரு அத்யயன உற்சவம் இன்று காலை 6.00 – 7.30 க்குள் தனுசு லக்கினத்தில் ஆழ்வாா்திருநகாியில் தொடங்கியது. முதலாவதாக உடையவர் சன்னதியில் இருந்து ஸ்ரீஉடையவர், கூரத்தாழ்வான், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்ததேசிகர் என ஆச்சாா்யா்களுடன் யானை முன்னே செல்ல மேளதாளங்களுடன் புறப்பட்டு ஊா்வலமாக சுவாமி நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளினர்.

சுவாமி நம்மாழவாா் சன்னதியில் அரையா் திருப்பல்லாண்டு கேட்டருள ஏழுந்தருள வேண்டும் என அருளிப்பாடு விண்ணப்பம் செய்தாா்.

தொடர்ந்து பகல் பத்து மண்டபத்துக்கு பெருமாள் தாயார் சுவாமி நம்மாழ்வார் சேனை முதல்வர் 12 ஆழ்வார்களுடன் எழுந்தருளி அரையர் அபிநய வியாக்யானத்துடன் திருப்பல்லாண்டு தொடங்கியது..

இன்று இன்று தொடங்கி இருபத்தி ஒரு நாள்கள் திரு அத்யயன உற்சவம் சிறப்பாக நடைபெறும். ஏற்பாடுகளை திருக்கோவில் நிா்வாகம் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

What do you think?

ஆத்விக் செமயா டான்ஸ் ஆடுறாரே… சோஷியல் மீடியால செம ட்ரெண்டிங்!

விருத்தாசலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..