in

மார்கழி மாத பிறப்பையொட்டி அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…..

மார்கழி மாத பிறப்பையொட்டி அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…..

 

மார்கழி மாத பிறப்பையொட்டி அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்…..

மார்கழி மாத பிறப்பையொட்டி அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மார்கழி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 4:30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக மார்கழி மாத பிறப்பையொட்டி அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நாயகருக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையோட விருதுகள் வழங்கும் விழா