in

பழைய படங்களை ரீ-ரிலீஸ் பண்றதுக்கு ரசிகர்கள் மத்தியில செம வரவேற்பு


Watch – YouTube Click

பழைய படங்களை ரீ-ரிலீஸ் பண்றதுக்கு ரசிகர்கள் மத்தியில செம வரவேற்பு

 

இப்போல்லாம் பழைய படங்களை (ரீ-ரிலீஸ்) மறுபடியும் ரிலீஸ் பண்றதுக்கு ரசிகர்கள் மத்தியில செம வரவேற்பு கிடைச்சிருக்கு!

போன வருஷம் தளபதி விஜய்யோட ‘கில்லி’ படம் ரீ-ரிலீஸ் ஆகி, மாபெரும் வசூல் செஞ்சு சாதனை படைச்சுச்சு. அதைத் தொடர்ந்து, இந்த வருஷம் ரஜினிகாந்தோட ‘படையப்பா’ படமும் ரீ-ரிலீஸ் ஆகி வசூல்ல பட்டையைக் கிளப்பிட்டு இருக்கு.

‘கில்லி’யோட ரீ-ரிலீஸ் வசூலைவிட, ‘படையப்பா’ சீக்கிரமே அதிக வசூல் செஞ்சு சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கப்படுது.

இப்போ ரசிகர்கள் மத்தியில, இந்தப் படம் பெருசா, அந்தப் படம் பெருசானு, ‘படையப்பா‘ மற்றும் ‘கில்லி’ படத்தோட ஒரிஜினல் வசூல் பத்தி ஒரு ஒப்பீடு நடந்துட்டு இருக்கு.ஒரு குரூப், 1999-ல வந்த ‘படையப்பா’ வசூல் தான் அதிகம்னு சொல்றாங்க.

இன்னொரு குரூப், 2004-ல வந்த ‘கில்லி’ வசூல் தான் அதிகம்னு சொல்றாங்க.

இப்படி ஒரு குழப்பம் இருக்கிற நிலையில, இந்த ரெண்டு படத்தோட உண்மையான வசூல் நிலவரம் பத்தின தகவல் வெளியாகி இருக்கு.

1999ம் ஆண்டு வெளியான படையப்பா தமிழ்நாட்டில் ரூ.29 கோடியும், உலகளவில் ரூ. 60 கோடியும் வசூல் செய்தது.

2004ஆம் ஆண்டு வெளியான கில்லி தமிழ்நாட்டில் ரூ. 25 கோடியும், உலகளவில் ரூ. 37.5 கோடியும் வசூல் செய்தது.

இந்தப் பட்டியலைப் பார்த்தா, அப்போதைக்கு ‘படையப்பா’ வோட வசூல் தான் அதிகம்னு சொல்லப்படுது. இதுதான் இந்த ரெண்டு படத்தோட உண்மையான ஒரிஜினல் வசூல்னு சினிமா வட்டாரங்கள்ல சொல்றாங்க.

What do you think?

“ஏகே 64” படத்துல முக்கியமான ரோல்ல (கதாபாத்திரம்) ரெஜினா

சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ் அல்லிய நடிகை ஸ்ரேயா சரண் போட்டோஷூட்