ஒரு கேரக்டரா அவர் கால்ல விழுந்து அழுறதுல என்ன தப்பு இருக்கு? – நடிகர் சரத்குமார்
இந்த 2025-ல ரொம்ப பெரிய ஹிட்டான படமும், அதே சமயம் அதிகமா சர்ச்சைக்குள்ளான படமும் ‘Dude’ தான்.
இந்தப் படத்தை கீர்த்திஸ்வரன்ங்கிற புது டைரக்டர் எடுத்தாரு.
இந்தப் படத்துல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணின்னு நிறையப் பேர் நடிச்சிருந்தாங்க.
மியூசிக் சாய் அப்யங்கர். இளைஞர்கள் மத்தியில செம ஹிட் ஆன இந்தப் படத்துல, சரத்குமாரோட கேரக்டருக்கு ரொம்பப் பெரிய வரவேற்பு கிடைச்சுச்சு.
இந்த நிலையில, சரத்குமார் சமீபத்துல ஒரு பேட்டியில, ‘Dude’ படத்தைப் பார்த்துட்டு நடிகை தேவயானி தனக்கு போன் பண்ணிப் பேசுன ஒரு விஷயத்தைப் பத்தி ஓப்பனா சொல்லிருக்காரு:
” ‘Dude’ படம் பார்த்திட்டு தேவயானி எனக்கு போன் பண்ணி, ‘நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க’ன்னு சொன்னாங்க. ஆனா, ‘நீங்க பிரதீப் கால்ல விழுந்து அழுதீங்களே, அத எப்படிப் பண்ணீங்க?’னு கேட்டாங்க.
“அதுக்கு சரத்குமார் பதில் சொல்லியிருக்காரு: “நான் ஒன்னும் பிரதீப் கால்ல விழுந்து அழலை. அவன் என்னோட தங்கச்சி பையன் கால்ல தான் விழுந்தேன்.
இப்போதான் பிரதீப் நடிச்சிட்டு இருக்காரு. ஆனா, ஒரு கேரக்டரா (கதாபாத்திரமா) அவர் கால்ல விழுந்து அழுறதுல என்ன தப்பு இருக்கு?”
அப்படின்னு சொல்லியிருக்காரு. அதாவது, கேரக்டர்ல நடிக்கும் போது உறவு முறை பார்க்க வேண்டியதில்லைன்னு சொல்லியிருக்காரு.


