in

வாழ்க்கையில ரொம்ப அடி வாங்கிருக்கேன் – சிம்பு (STR) Open Talk

வாழ்க்கையில ரொம்ப அடி வாங்கிருக்கேன் – சிம்பு (STR) Open Talk

 

தமிழ் சினிமாவுல நம்ம சிம்பு (STR) ஒரு டாப் ஹீரோ அவர் அடுத்ததா நடிக்கிற படத்தோட பேரு ‘அரசன்’. இந்தப் படத்தை வெற்றிமாறன் டைரக்ட் பண்றாரு, மியூசிக் அனிருத் போடுறாரு.

சில வாரத்துக்கு முன்னாடி வந்த டைட்டில் அறிவிப்பு வீடியோ செம ஹிட் ஆச்சு. இந்தப் படம் வட சென்னை ஏரியா கதை மாதிரி இருக்குமாம். அதனால ஃபேன்ஸ் ரொம்ப எதிர்பார்ப்போட காத்திருக்காங்க.

இதுபோக, சிம்பு கையில *’STR 49’*னு இன்னொரு படமும் இருக்கு. சமீபத்துல சிம்பு மலேசியா போயிருந்தப்போ, அங்க கார் ரேஸ்ல இருந்த நம்ம அஜித் சாரைச் சந்திச்சாரு.

அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்த போட்டோ, வீடியோ எல்லாம் இன்டர்நெட்ல வைரல் ஆச்சு. இப்போ இன்டர்நெட்ல வைரலாகுற இன்னொரு விஷயம், சிம்பு தன்னோட கல்யாணத்தைப் பத்தி ஓப்பனா பேசுனது தான்.

அவர் என்ன சொல்லிருக்காருன்னா: “கல்யாணம் நடக்கும்போது தானா நடக்கும். நீங்க தனியா இருக்கீங்களா, இல்லன்னா யாரோ ஒருத்தர் கூட இருக்கீங்களாங்கிறது முக்கியமில்லை.

நீங்க நிம்மதியா, ஒழுங்கா, சந்தோஷமா இருக்கீங்களாங்கிறது தான் முக்கியம். நாலு பேரை நிம்மதியா பாத்துக்கிறீங்களா? அது போதும். நான் இப்போ இப்படிப் பேசறதுக்குக் காரணமே, வாழ்க்கையில ரொம்ப அடி வாங்கிருக்கேன்”னு சொல்லிருக்காரு.

What do you think?

கிறிஸ்துமஸ் அன்னைக்கு ரிலீஸ் ஆகப் போகுது ‘மார்க்’ படம்

காடம்புலியூரில் பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்