in

நடிகர் கார்த்தியின் 26-வது படம் ‘வா வாத்தியார்’


Watch – YouTube Click

நடிகர் கார்த்தியின் 26-வது படம் ‘வா வாத்தியார்’

 

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள்ல ஒருத்தர் நம்ம நடிகர் கார்த்தி.

இவர் நடிப்புல சமீபத்துல வந்த ‘மெய்யழகன்’ படம் நல்லா ஓடுச்சு.

அதைத்தொடர்ந்து, இப்போ நலன் குமாரசாமி டைரக்‌ஷன்ல தன்னோட 26-வது படமான ‘வா வாத்தியார்’லயும் நடிச்சு முடிச்சிட்டாரு.

நலன் குமாரசாமி முன்னாடியே ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’னு ஹிட் படங்கள்லாம் எடுத்திருக்காரு.

கார்த்தி இந்தப் படத்துல எம்.ஜி.ஆர். ரசிகரா நடிச்சிருக்காரு. கீர்த்தி ஷெட்டிதான் இதுல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம, சத்யராஜ், ராஜ்கிரண்ன்னு நிறைய பேர் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.

ஸ்டூடியோ கிரீன் கம்பெனிதான் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காங்க. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் மியூசிக் போட்டிருக்காரு.

இந்தப் படம் வர்ற 12-ம் தேதி ரிலீஸ் ஆகும்னு படக்குழு சொல்லியிருக்காங்க. இதுக்கு முன்னாடி, படத்தோட ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாட்டுன்னு அடுத்தடுத்து வந்து ரசிகர்களோட கவனத்தை ஈர்த்துச்சு.

இப்போ, இந்தப் படத்தோட ட்ரெய்லரும் வெளியாகி இருக்கு. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள்கிட்ட நல்ல வரவேற்பு வாங்கிகிட்டு இருக்கு.

What do you think?

போதைப்பொருள் கேஸ்ல கைதான இணை தயாரிப்பாளர்

பாளையங்கோட்டை பள்ளியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்