in

நெய்வேலி பள்ளியில் அறிவியல் கண்காட்சி மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

நெய்வேலி பள்ளியில் அறிவியல் கண்காட்சி மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

நெய்வேலியில் உள்ள தனியார்  பள்ளி சார்பில் முன்னாள்  குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் தலைவர் மதார்ஷா  தலைமை தாங்கினார். தாளாளர் அன்வர்தீன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட தனியார் பள்ளி கல்வித்துறை அலுவலர் மோகன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

மேலும் அறிவியல் கண்காட்சி தொடங்கி வைத்து  சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட அறிவியல் சார்ந்த செயல்முறைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து காண்பித்தனர்.

நிகழ்ச்சியில் ஜமாத் செயலாளர் மீரான் மொய்தீன், துணைத்தலைவர் அபுபக்கர் சித்திக், பொருளாளர் அப்துல் சமத், அகில இந்திய சிறுபான்மை நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷ௧ஜகான், முதன்மை நிர்வாகிகள் ஆல்வின் ராஜா, சாதிக் மற்றும் ஜான் பிரிட்டோ மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஈவா ஜாஸ்மீன், ரன்ஜித் குமார் ஆகியோ நன்றி கூறினார்.

What do you think?

Roulette with Exclusive Bonuses UK for Mac

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் மௌன அஞ்சலி