திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம்
பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம். முதல் நாள். முதல் வாகன புறப்பாடாக சின்னசேஷ வாகன புறப்பாடு.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு துவங்கி பிரம்மோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சின்னசேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவ தாயார் வாகன மண்டபத்தை அடைந்து தங்க சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து ஜீயர் கோஷ்டியின் திவ்ய பிரபந்த கானம், வேத பண்டிதர்களின் நான்மறை வேத கோஷம், பக்தர்களின் பக்தி முழக்கம், கலை நிகழ்ச்சிகள், மங்கள வாத்தியம் ஆகியவற்றுக்கு இடையே தாயாரின் சின்னசேஷ வாகன புறப்பாடு திருமாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது திருமாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து தாயாரை வழிபட்டனர்.


