in

மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்ட பஞ்ச மூர்த்திகள் மர தேர்

மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்ட பஞ்ச மூர்த்திகள் மர தேர்

 

மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்ட பஞ்ச மூர்த்திகள் மர தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலையில் நிறுத்தம்……

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 21ம் தேதி ஊர் காவல் தெய்வமான தூர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து 24ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலின் நான்கு மாட வீதியில் ஒன்னறை கிலோமீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் பஞ்சமூர்த்திகள் மர தேர் மாற்று இடத்தில் நகர்த்தி வைக்கப்பட்டது.

15 கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் பூஜைகள் செய்து முதலில் விநாயகர் தேரை இழுத்து வந்து அதன் நிலையில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து முருகர் தேர் மற்றும் அண்ணாமலையார் தேரை பக்தர்கள் வடம் பிடித்தும், ஜேசிபி வாகனம் மூலம் இழுத்து வந்து அதன் நிலையில் நிறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தேரை இழுத்தனர்.

What do you think?

பேருந்தின் படியில் வவ்வால் போல  தொங்கி வரும் பள்ளி மாணவர்கள்

சாலையில் ஓடும் கழிவுநீரை மிதித்து செல்லும் பள்ளி மாணவிகள்…..