in

பசுமைப் பயணம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி எம்பி முரசொலி பங்கேற்பு

பசுமைப் பயணம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி எம்பி முரசொலி பங்கேற்பு

 

தஞ்சாவூர் மகளிர் கல்லூரியில் பசுமைப் பயணம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி எம்பி முரசொலி பங்கேற்பு

தஞ்சாவூரில் தமிழக துறவியர் பேரவை, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி சார்பில் பசுமை பயணம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, கடந்த 5 ந் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பசுமை விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் நடைபெற்றது.

இதையடுத்து விளார் புறவழிச் சாலையில் இருபுறமும் தூய்மை செய்யப்பட்டு ஒரு டன் நெகிழி பொருட்கள் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் எம்பி முரசொலி எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் இராமநாதன் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்போம், வாழ்வுரிமையை மீட்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பூமியினை காப்போம் என்ற விழிப்புணர்வு குறித்து துணை மேயர் அஞ்சுகம் பூபதியிடம் 50 ஆயிரம் நபரிடம் பெற்ற கையொப்பங்கள் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி 800 மீட்டர் தடுப்பு வேலி அமைத்து அதில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி விக்டோரியா, ராமகிருஷ்ண மட தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று அசத்தல்

நடிகர்களுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்!