துலா உற்சவ பெருந்திருவிழா பரிமள ரெங்கநாதர் வீதியுலாவில் சுவாமி தரிசனம்
துலா உற்சவ பெருந் திருவிழாவை முன்னிட்டு திருப்பதி பெரிய ஜீயர் இராமர் அவராதத்தில் பரிமள ரெங்கநாதர் வீதியுலாவில் சுவாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ளது பரிமள ரெங்கநாயகி உடனாகிய பரிமள ரெங்கநாதர் ஆலயம்.
1000 ஆண்டுகள் பழைமையான பஞ்சரங்கத்தில் ஐந்தாவது அரங்கம்.108 திவ்ய தேசத்தில் 22 வது திவ்ய தேசமாகும்.
ஐப்பசி துலா உற்சவ பெரு நாளை முன்னிட்டு இன்று ஐந்தாம் நாள் நிகழ்வில் இராமர் அவதாரத்தில் ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் வீதியுலா எழுந்தருளினார்.அப்போது திருப்பதி திருமலை தேவஸ்தானம் பெரிய கோயில், பெரிய ஜீயர் ஆகிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இராமானுஜ சடகோப பெரிய ஜீயர் சுவாமிகள் எழுந்தருளி இராமர் அவதாரத்தில் உள்ள பரிமள ரெங்கநாதரை சேவித்தார்.

அப்போது ஏராளமான பக்தர்கள் ஜீயரை தரிசித்து அருளாசி பெற்றனர் தொடர்ந்து நான்கு ரத வீதிகளில் வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து பரிமள ரெங்கநாதரை வழிபட்டனர்.


