in

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ரெட் அலர்ட்

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ரெட் அலர்ட்

 

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி 4 மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற தீனைப்பு வீரர்கள் அதிநவீன உபகரணங்களுடன் மீட்பு பணிகளுக்காக புறப்பட்டு சென்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு அதிக கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மீட்டு பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த அதிநவீன பயிற்சி பெற்ற 30 தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் லைப் போர்ட் லைஃப் ஜாக்கெட் மரம் இருக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்களுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

இங்கிருந்து புறப்பட்டு செல்லும் வீரர்கள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ரெட் அலர்ட் அதிக கன மழை காண எச்சரிக்கை வாபஸ் பெரும் வரை அங்கு பணி செய்வார்கள் என நெல்லை மண்டல தீயணைப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்கள்

வடகிழக்கு பருவமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் திறப்பு…