in ,

தமிழ்நாட்டிற்கு மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டிற்கு மழை எச்சரிக்கை

 

36 மணி நேரம்: வங்கக்கடலில் – காற்றழுத்தம் ‘புயல் சின்னம்’ ஆகிறது! – தமிழ்நாட்டிற்கு மழை எச்சரிக்கை.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை உருவானது.

இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சின்னம், பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புதிய புயல் சின்னத்தின் காரணமாக, வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை தொடரக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது கனமழை வாய்ப்பு அதிகரிக்கும். கடலோர மாவட்டங்கள், குறிப்பாக வடக்கு கடலோரப் பகுதிகள் (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) அதிக மழையைப் பெறக்கூடும்.

வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதால், அடுத்த மூன்று நாட்களுக்கு வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.

மாவட்ட நிர்வாகங்கள் நிலைமையைக் கண்காணித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

What do you think?

கொட்டும் மழையில் 10 டன் தீபாவளி குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு – ‘ரெட் அலர்ட்’