எடிசனின் நினைவு நாளில் டெஸ்டாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை
எடிசனின் நினைவு நாளில் டெஸ்டாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தாமஸ் ஆல்வா எடிசன் – நிகோலா டெஸ்லா இருவரும் சமகால போட்டியாளர்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரத்தை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றார்போல் வடிவமைத்ததில் எடிசன் முக்கியத்துவம் பெறுகிறார். அதற்காக அன்றைய காலகட்டங்களில் டெஸ்லாவை யாரும் அறியவில்லை என்று நினைக்க வேண்டாம்.
எடிசனின் கண்டுபிடிப்புகள் சாமானிய மக்களுக்கு தேவையானதாக இருக்கும்படி இருந்தன. டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் மிகப்பெரும் இயந்திர பயன்பாடுகளுக்கும், பெரும் ஆலைகளின் பொறியியல் வல்லமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தன.
இதில் தனிமனித சுயநல புத்தி என்றெல்லாம் ஒன்றுமில்லை.
பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் அவரவர் பெயர்கள் வெளிவந்துள்ளது.
இரண்டு வகையான மனிதர்கள் என கேள்விப்பட்டிருப்போம்.
சினிமாவில் இரண்டு வகையான இயக்குநர் இருப்பார்கள். சினிமாவை கலைத்துவமாக அணுகுவது, சினிமாவை வணிக ரீதியாக அணுகுவது
அதேபோல் தான் ஆராய்ச்சி/கண்பிடிப்பில் இரண்டு வகையான மனிதர்கள். இவர்கள் தான் டெஸ்லா மற்றும் எடிசன்.
உண்மையான அறிவியலை நேசித்து புதிய கண்டுபிடிப்பு மூலம் மனித வளர்ச்சிக்கு உதவுதல் ஒரு ரகம். தனக்கு தெரிந்த அறிவியலை பயன்படுத்தி பணமும், புகழும் சம்பாதிப்பது ஒரு ரகம். இதில் இரண்டாம் ரகத்தை சேர்ந்த எடிசனின் அரசியல் சூழ்ச்சியால் முதல் ரகத்தை சேர்ந்த டெஸ்லா வீழ்த்தப்பட்டார் என்பதே உண்மை.


