மயிலாடுதுறையில் ஐப்பசி முதல் நாள் முன்னிட்டு பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் கங்கை முதலான புண்ணியநதிகள் ஐப்பசிமாதத்தில் வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக ஐதீகம்.
இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடினால் இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் காவிரியை மையப்படுத்தி மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், பரிமள ரங்கநாதர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் 10 நாட்கள் துலா உற்சவம் தீர்த்தவாரிகள் இந்தியாவில் புகழ்பெற்ற ஒன்றாகும்.

இன்றைய ஐப்பசி மாதம் முதல் நாளை முன்னிட்டு காலை முதலே திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


