சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடை உட்பட ஐந்து கடைகளில் திருட்டு
சீர்காழி தைக்கால் பகுதியில் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடை உட்பட ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து ரூபாய் 73500 ரொக்கம் திருட்டு ஆனைக்காரன் சத்திரம் போலீசார் தீவிர விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கை கால் பகுதியில் நள்ளிரவில் சூப்பர் மார்க்கெட் மற்றும் மூன்று மளிகை கடை பூட்டை உடைத்து ரொக்க பணம் திருட்டு இரவு கடையை அடைத்து விட்டு சென்ற நிலையில் காலை கடையை திறந்து போது பூட்டு உடைக்கப்பட்டு ரொக்க பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
கடை உரிமையாளர்கள் கடை உடைக்கப்பட்டு திருடப்படுவதைக் கண்டு அதிர்ச்சி தொடர்ந்து ஆணைக்கரைசத்திர காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தைக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள GM சூப்பர் மார்க்கெட்டில் ரூபாய் 14000, இமாம் அலிக்கு சொந்தமான மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூபாய் 15000, ஜெசித் அகமதுக்கு சொந்தமான மளிகை கடையில் ரூபாய் 40000,வெங்கடேசனுக்கு சொந்தமான வெங்கடேசன் மளிகை கடையில் ரூபாய் 4500 என மொத்தம் ரூபாய் 73500 திருடப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு ஆடை கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி இதுகுறித்து ஆனைக்கரசத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் பிரதான சாலையில் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


