கரு மேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்படும் பாம்பன் பாலம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அதிகாலை முதல் தொடர்ந்து மேகமூட்டத்துடன் மழை பெய்து வருவதால் கரு மேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்படும் பாம்பன் பாலம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியடுத்து ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் அவ்வப்போது கனமழையாகவும், சாரல் மலையாகவும் பெய்து வருவதுடன் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருவதால் பாம்பன் வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், பரமக்குடி, அக்காள்மடம், உச்சிப்புளி, ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாமல் மிகுந்த அவதியுற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரமக்குடி, பார்த்திபனூர், போகலூர், சத்திரக்குடி உள்ளிட்ட ராமநாதபுரம் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வந்தது.
இதனிடையே ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் சாரல் மழையும் பெய்து வருகிறது.
மேலும் வானம் மேகமூட்டங்களுடன் இருள் சூழ்ந்து இருப்பதால் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. இதனால் பாம்பன் வந்துள்ள சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் பாம்பன் பாலை பாலத்தின் பயணிக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை விட்டவாறு செல்கிறது.

பாம்பன் கடல் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு உள்ள ரம்மியாமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்
காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசி வருவதால் மலை பிரதேசங்களில் இருப்பதை போல் உணர்வதாக ராமேஸ்வரம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.


