in

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 47 பேர் நேற்று இரவு கடற்படையினரால் கைது

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 47 பேர் நேற்று இரவு கடற்படையினரால் கைது

 

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 47 பேர் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 5 படகுகளில் மீன்பிடிக்க புறப்பட்டு இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டபோதே இந்த 47 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 47 மீனவர்களஇல் 30 மீனவர்கள் அதிகாலை மன்னார் கடற்படைத் தளத்திற்கு கொண்டு வரப்படவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரகள் ஊடாக நீதிமன்றில் ஆயர் செய்யப்படவுள்ளனர்.

இதே நேரம் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 17 இந்திய மீனவர்கள் ஒரு படகில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்படுகின்றனர்.

What do you think?

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

பாம்பன் கடலில் வீணாகும் காவிரி குடிநீர்