in

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

 

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் 38 மாவட்டத்தில் இருந்து 646 கல்லூரி மாணவிகள் பங்கேற்பு….

முதல் பரிசு 12 லட்சம், இரண்டாம் பரிசு 8 லட்சம், மூன்றாம் பரிசு 4 லட்சம்….

திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.

இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த போட்டியானது நடைபெற உள்ளது. இந்த கைப்பந்து போட்டியில் விழுப்புரம், பெரம்பலூர், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 38 மாவட்டத்தில் இருந்து 646 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கைப்பந்து போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மூன்று அணிகளுக்கு முதல் பரிசு 12 லட்சம், இரண்டாம் பரிசு 8 லட்சம், மூன்றாம் பரிசு 4 லட்சம் வழங்கப்பட உள்ளது.

What do you think?

ஆஞ்சநேயர் கோயிலில் அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 47 பேர் நேற்று இரவு கடற்படையினரால் கைது