சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழை
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்து வரும் கனமழை, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாமலை நகர், சிவபுரி, நடராஜபுரம், பிச்சாவரம், முட்லூர், பரங்கிப்பேட்டை, சாமியார் பேட்டை, புதுச்சத்திரம், சீர்காழி புறவழிச்சாலை, மணலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் காட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் அவ்வப்போது மழை விட்டு விட்டு லேசாக மழை பெய்து வந்தது.
இந்நிலையில் தற்போது சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை இந்தப் பகுதிகளில் கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
மேலும் கல்லூரி பள்ளி விடும் நேரத்தில் மழை பெய்து வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி அவதூற்று செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


