திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருட சேவை விமரிசையாக நடைபெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு,
தங்கக் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று இரவு கருட சேவை விமரிசையாக நடைபெற்றது.
உற்சவர் மலையப்ப சுவாமி சர்வ அலங்காரத்துடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிகழ்வில், மாட வீதிகளில் காத்திருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா…என பக்தி கோஷம் எழுப்பி, மலையப்ப சுவாமியை தரிசித்து பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

