விமானத்தில் கல்வி சுற்றுலா சென்ற ஏழை மாணவர்கள்…
புதுச்சேரி காலாப்பட்டு அமலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி சார்பில் இலவசமாக விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

முதல்முறையாக விமானத்தில் செல்லும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இங்கு படித்து வரும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி பல்வேறு விதமான போட்டிகள், அறிவியல் கருத்தரங்குகள் நடத்தி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கல்வி சுற்றுலாக்கள் அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பில் கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் 18 பேரை தேர்வு செய்து அவர்களை இலவசமாக விமான மூலம் கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் நகரத்திற்கு விமானத்தில் சென்றனர்.

ஹைதராபாத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்கள் வரலாற்று புகலிடங்கள் ஆகியவற்றை பார்த்துவிட்டு 9ம் தேதி ரயில் மூலம் புதுச்சேரி திரும்புகின்றனர்.
விமானத்தில் கல்வி சுற்றுலா செல்வது குறித்து மாணவி கூறுகையில், மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த நான் வெளியூர் சுற்றி பார்ப்பது கூட இல்லை. எங்களது பள்ளி தாளாளர் எங்களை விமான மூலம் ஹைதராபாத் நகரத்திற்கு அழைத்துச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.


