ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுத ஸ்வாமி ஆலயத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் நவராத்திரி தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் முருகருக்கு பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நவராத்திரி நிறைவு நாள் மற்றும் விஜயதசமி முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி பெருமத்தூர் கடை வீதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ வெற்றி வேலாயுத சாமி சிறப்பு அலங்காரத்தில் கிடா வாகனத்தில் அமர்ந்து நகரின் பல்வேறு வீதிகளில் வலம் வந்து பொதுமக்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பெருமாத்தூர் கடை வீதியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முருகர் வன்னி மற்றும் வாழை மரத்திலான அசுரனை வேல் கொண்டு வீழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்பு போடுதல் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.


