இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தரமற்ற பணிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
வந்தவாசி அருகே ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி மூன்றே மாதங்களில் கோபுரத்தின் கலசங்கள் கீழே விழுந்த அவல நிலை…..

இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தரமற்ற முறையில் பணிகள் செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு….
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று மூன்றே மாதங்களில் கோபுரத்தின் கலசங்கள் கீழே விழுந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சவேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்து கடந்த 16-02-2025 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் கோவிலின் புனரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதால் கும்பாபிஷேகம் நடந்த மூன்றே மாதங்களில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் கீழே விழுந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோவிலின் சுவர்கள் பெயர்ந்து பெயிண்டிகள் உறிந்த நிலையில் காட்சியளித்து வருகிறது.
கோவிலை உரிய முறையில் புணரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


