நவராத்திாி தசரா திருவிழாவில் மகிஷசம்ஹாரம்
பாளையங்கோட்டை நவராத்திாி தசரா திருவிழாவில் மகிஷாசுரமா்த்தினியாக எருமைகிடா மைதானத்தில் மகிஷசம்ஹாரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்.

தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா விழாவிற்காக பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 12 அம்மன திருக்கோயில்களில் கடந்த 10 தினங்களாக தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
பாளைங்கோட்டையில் அருள்பாலிக்கும் ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன் முப்பிடாதி அம்மன் முத்தாரம்மன் உச்சினிமாகாளி அம்மன் என 12 திருக்கோவில்களிலும் கடந்த 9 நாட்கள் கொலு மண்டபத்தில் பல்வேறு -அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனா்.
10ம் திருநாளான விஜயதசமியையொட்டி மகிஷாசூரவதம் செய்வதற்காக நேற்று இரவு மின்னொளியில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. சப்பரங்கள் 8 ரதவீதிகள் வழியாக உலா வந்து எருமைகிடா மைதானத்தை வந்தடைந்தது.
12 சப்பரங்களும் ஒன்றாக அணிவகுத்து நிற்க மகிஷாசூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்வு நடைபெற்றது. மகிஷன் அம்பாளை நோக்கி வர தலைவியான ஆயிரத்தம்மன் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட சூலாயுதத்தால் தலையை வெட்டினாா். தொடா்ந்து மகிஷ முகம் (ஏருமை தலை) கொண்டு ஆக்ரோஷத்துடன் போா் புாியவர அம்பாள் கோபத்துடன் மகிஷனை சம்ஹாரம் செய்தாா்.

மகிஷ வதம் முடிந்ததும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நாளை தாமிரபரணி ஆற்றில் தீா்த்தவாாி நடைபெறும். தசரா விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந் நிகழ்ச்சியினை கண்டு வணங்கினா்.
விழா ஏற்பாடுகள அந்து சமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா். மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


