in

பாளையங்கோட்டையில் 12 அம்மன் சப்பரங்கள் பெற்ற நவராத்திாி தசரா திருவிழா

பாளையங்கோட்டையில் 12 அம்மன் சப்பரங்கள் பெற்ற நவராத்திாி தசரா திருவிழா

 

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவராத்திாி தசரா திருவிழா. பாளையங்கோட்டையில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்.

தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா திருவிழா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 12 அம்மன் சப்பரங்களுடன் வீதி உலா வந்து மகிஷசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தசரா விழா கடந்த 22ம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடா்ந்து பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, விஸ்வகர்மா உச்சினிமாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில்களில் தசரா திருவிழா தொடங்கியது.

12 தினங்கள் நடைபெற்ற நவராத்திாி தசரா திருவிழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்றது.

விஜயதசமி தினமான நேற்று இரவு அம்மன் கோயில்களிலிருந்து சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமா்த்தினியாக போா்கோலம் பூண்டு மின்னொளியில் 12 சப்பரங்கள் நள்ளிரவு ரதவீதிகளில் வலம் வந்தனா்.

இன்று காலையில் அருள்மிகு ராமசாமி கோயில் திடலில் அனைத்து அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிற்க ஒரே நேரத்தில் கற்பூர ஆரத்தி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்பாளுக்கு புடவை, பழ வகைகள் சமா்பித்ததும்.

தேங்காய்கள் உடைத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். இன்று நள்ளிரவில் மாரியம்மன் கோவில் திடலில் மகிஷசம்ஹாரம் நடைபெறுகின்றது.

What do you think?

நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

பல்லவராயன்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் திருவிழா