விஜய சரஸ்வதி திருக்கோவில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அபிஷேக அலங்காரம்
விஜயதசமி திருநாளையொட்டி முதன் முதலில் கல்வி கற்கும் குழந்தைகள் நெல்லை டவுன் விஜய சரஸ்வதி திருக்கோவில் அகர எழுத்தை எழுதி கல்வி தொடங்கும் வித்ய ஆரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திரளான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்து அகரத்தை எழுதி கல்வியை தொடங்கி வருகின்றனர்.
நவராத்திரி திருவிழாவில் 9 நாள் நிறைவு பெற்ற நிலையில் பத்தாம் நாளான இன்று விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதர்மம் அளிக்கப்பட்டு தர்மம் வென்ற நாளாக கருதப்படும் விஜயதசமி நாளில் புதிய செயல்கள் தொடங்கினால் வெற்றி என்பது ஐதீகம் அதன்படி கல்வி கற்பது புதிய தொழில் தொடங்குவது உள்ளிட்ட நிகழ்வுகள் இன்றைய தினம் தொடங்குவது வழக்கம் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள வித்யா சரஸ்வதி ஆலயத்தில் குழந்தைகள் கல்வியை தொடங்கும் வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது இதில் நெல்லை மாநகரப் பகுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து சரஸ்வதி தேவியை பிரார்த்தனை செய்து நெல்மணியில் தமிழ் எழுத்தின் முதல் எனும் அகரத்தை எழுதி கல்வியை தொடங்கினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பேனா பென்சில் நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகளும் கல்கண்டு போன்ற பிரசாத வகைகளும் வழங்கப்பட்டது.

