ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் எட்டாம் நாள் காலை தேரோட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் ஆன இன்று காலை 7 மணிக்கு துவங்கி உற்சவர் மலையப்ப சுவாமியின் தேரோட்டம் கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெறுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை கோவிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தூப தீப நைவேத்திய சமர்ப்பணத்திற்குப் பின் துவங்கிய தேரோட்டம் கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் வடம்பிடிக்க மாடவீதிகளில் நடைபெற்ற ஏழுமலையானின் தேரோட்டத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்துக் கொண்டுள்ளனர்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு வாகன புறப்பாடாக குதிரை வாகன புறப்பாடு இன்று இரவு திருமலையில் நடைபெற உள்ளது.


