திருமலை பிரம்மோற்சவம் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு
கருட சேவையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த சுடர்கொடியாளுக்கு சூட்டப்பட்ட மலர்மாலைகள் பச்சை கிளிகள் ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்.

இரவு திருமலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற உள்ளது.
முன்னதாக காலை ஏழுமலையானின் மோகினி அலங்கார புறப்பாடும் நடைபெற இருக்கிறது.
கருட வாகன புறப்பாட்டின் போது உற்சவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாருக்கு சூடி திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்ட மலர்மாலையை அணிவிப்பது வழக்கம்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் தாயாருக்கு சூடி களையப்பட்ட மலர் ஜடை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவற்றை நாளை காலை திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் மோகினி அலங்கார புறப்பாட்டில் உற்சவருக்கு அணிவிப்பதும் வழக்கம்.

எனவே இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் தாயாருக்கு சூடி களையப்பட்ட மலர் ஜடை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி, மலர் மாலைகள் ஆகியவை இன்று திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டன.
திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் அவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் கோவில் மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவற்றை கோவில் பெரிய ஜீயர் ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.


