நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் திருத்தோர் வெள்ளோட்டம்
நாமக்கல் நகர் கடைவீதியில் அமைந்துஉள்ள அருள்மிகு வாசவி கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் திருத்தேர் வெள்ளோட்ட விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக உற்சவ வாசவி கன்னிகா பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் கையில் ஏந்தியவாறும் பக்தர்கள் திருத்தேரினை முக்கிய வீதிகள் வழியாகநாதஸ்வரம் செண்டை மேளம் மயிலாட்டம் அலங்கார குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுடன் பல்வேறு வீதிகள் வழியாக இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வருகை புரிந்த அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அதன் தலைவர் பி தாஸ் என்கின்ற தாசப் செட்டியார் மற்றும் தேர் விழா குழுவினர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.


