in

ஸ்ரீ பிரம்ம முகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீ பிரம்ம முகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

 

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிரம்ம முகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் எதிரே அமைந்துள்ள ஸ்ரீபிரம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத மாஹாளிய அம்மாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக பிரம்மமுகி தில்லை காளியம்மனுக்கு மிளகாய் வெற்றல் யாகம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து பம்பை இசை முழங்க, அம்மன், சிவன் பார்வதி, தில்லைகாளி, கருப்பசாமி ஆகிய வேடமிட்டு ஆடல் பாடலுடன் காளி நடனம் நடைபெற்றது.

பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான
பெண்கள் பாரம்பரிய முறைப்படி தாலாட்டுப் பாடலுடன் கும்மி அடித்து வழிபட்டனர்.

தொடர்ந்து இரவு 12 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள 72 அடி உயர தில்லை காளி சிலைக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

What do you think?

தூத்துக்குடியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் அலங்கார மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கும் திருமலை