தூத்துக்குடியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
தூத்துக்குடியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்
தூத்துக்குடியில் அருணா கார்டியாக் கேர் மற்றும் தூத்துக்குடி தெற்கு மற்றும் மேற்கு மண்டல பாரதி அண்ணா கட்சி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் சிறப்பு பரிசோதனைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை , தேவைப்படுபவருக்கு இசிஜி பரிசோதனை மற்றும் உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை, இதர மருத்துவ சேவைகளான ஆஞ்சியோகிராம், இருதய மாரடைப்பு பிரச்சனைகள், ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள், பக்கவாத சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் (ஹீமோதெரபி) மற்றும் கல்லீரல், கணையம் சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை, முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், எலும்பு முறிவு தண்டு வட அறுவை சிகிச்சைகள், கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள், பித்தப்பை கல் மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சைகள், நாள்பட்ட தீ காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மேற்கண்ட சிகிச்சைகளுக்கு இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு சலுகை கட்டணம் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் தூத்துக்குடி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை பங்கெடுத்தது. மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் மேற்கு மண்டலத்தை சார்ந்த மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், பொருளாளர் மற்றும் மேற்கு மண்டல துணைத் தலைவர் இசக்கிதுரை, மேற்கு மண்டல துணைத் தலைவர் வெள்ளைபாண்டி, மேற்கு மண்டல பொருளாதார பிரிவு செயலாளர் சீனிவாசன், தெற்கு மண்டல செயலாளர் அமல்ராஜ், மருத்துவ பிரிவு மாவட்டத் தலைவர் ரவீந்திர பாலாஜி மற்றும் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் ருக்மணி ஆகியோர் செய்திருந்தனர். இந்த இலவச மருத்துவ முகாம் ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் மேற்கு
மண்டலத்தை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் ருக்மணி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து பயனடைந்தனர். தொடர்ந்து இந்த மருத்துவ முகாமை குறித்து பேட்டி அளித்தனர்.

தெரிவிக்கையில் பாரத பிரதமர் மோடி ஜி பிறந்தநாளை முன்னிட்டு இலவச முகாம் ராஜுவ் நகர் அருகில் நடைபெறுகிறது இதில் ஏழை எளிய மக்கள் உடல் உடலில் உள்ள நோய்களை பராமரிக்காமல் இருப்பதால் இந்த முகாம் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த இலவச முகாமில் ஏராளமான கலந்துகொண்டு பயனடைந்தனர் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில் தூத்துக்குடி பாரத பிரதமர் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மேற்கு மண்டல சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று டீச்சர்ஸ் காலனி நடைபெறுகிறது இதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றன மேலும் பொதுமக்கள் பங்கு பெற்று நன்றி தெரிவித்தனர் என்றனர்.


